தேர்தல் தோல்வி எதிரொலி.. மாநில கட்சி அந்தஸ்தை இழக்கும் விஜயகாந்தின் தேமுதிக!

Report Print Kabilan in இந்தியா

விஜயகாந்தின் தே.மு.தி.க கட்சி தொடர்ந்து 2 தேர்தல்களில் 3 சதவிதத்திற்கும் குறைவான ஓட்டுகள் பெற்றதால், அதன் அங்கீகாரம் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் விஜயகாந்தின் தே.மு.தி.க, ஆளுங்கட்சியான அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது. ஆனால், அக்கட்சி போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது.

கடந்த 2009ஆம் ஆண்டு தேர்தலில் தே.மு.தி.கவின் வாக்கு சதவிதம் 10.1 ஆக இருந்தது. ஆனால், தற்போது 2.19 சதவிதமாக சரிந்துவிட்டது. 2016 சட்டசபை தேர்தலில் படுதோல்வியை சந்தித்த தே.மு.தி.க, அப்போது 16 லட்சத்து 34 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றது.

ஒரு மாநில கட்சிக்கான அங்கீகாரம் பெறுவதற்கு, மாநிலத்தில் பதிவான வாக்குகள் 6 சதவித ஓட்டுகளை ஒரு கட்சி பெற வேண்டும். ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

அல்லது ஒட்டுமொத்த சட்டசபை உறுப்பினர் இடங்களில், 3 சதவித உறுப்பினர்களை கொண்ட கட்சியாக இருக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதி ஆகும்.

ஆனால், தே.மு.தி.க தொடர்ந்து 2 தேர்தல்களில் 3 சதவிதத்திற்கும் குறைவான வாக்குகள் பெற்றிருப்பதால், அதன் அங்கீகாரம் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் தேர்தலில் அக்கட்சிக்கு முரசு சின்னம் கிடைக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers