மோடி பதவி ஏற்பு விழா: இலங்கை ஜனாதிபதி சிறிசேனா பங்கேற்பு

Report Print Arbin Arbin in இந்தியா

நாட்டின் பிரதமராக மோடி மீண்டும் பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் இலங்கை ஜனாதிபதி சிறிசேனா பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மோடி வரும் 30 ஆம் திகதி பிரதமராக பதவி ஏற்கிறார். கடந்த 2014-ல் மோடி, பிரதமராக பதவி ஏற்றபோது அப்போதைய இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதற்கு எதிராக தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. தற்போதைய தேர்தலில் தமிழகத்தில் பாஜகவுக்கு மரண அடி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மோடியின் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா பங்கேற்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers