பாஜக-வை வீழ்த்திய வசந்தகுமாருக்கு ஏற்பட்ட கட்டாயம்.. பதவியை ராஜினாமா செய்கிறார்

Report Print Basu in இந்தியா

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்ற தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் எச்.வசந்தகுமார், தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் வெற்றிப்பெற்று எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்ட வசந்த குமார், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமாரி தொகுதியில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை விட 2,59,933 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி வாகை சூடினார்.

இன்னும் சில நாட்களில் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க இருப்பதால் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இதனால் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வசந்தகுமார், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன். இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி ஆகியோரிடம் பேசி, அவர்கள் ஆலோசனைப்படி இந்த முடிவை எடுத்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers