இப்போது மட்டும் ஏன் ரஜினிகாந்த் பேசுகிறார்? தமிழகத்தில் தான் இந்த நிலை உள்ளது.. சீமான் ஆவேசம்

Report Print Raju Raju in இந்தியா

மக்களுக்கான போராட்டங்கள் எதிலும் பங்கேற்காத நடிகர்கள் அரசியலுக்கு மட்டும் எதற்கு வருகிறார்கள் என சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.

மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறவில்லை என்றாலும் கணிசமான வாக்குகளை பெற்றது.

முக்கியமாக பல இடங்களில் சீமானின் நாம் தமிழர் கட்சியும் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் மூன்றாவது இடத்திற்கு கடுமையாக போட்டி போட்டன

39 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 27 இடங்களில் மக்கள் நீதி மய்யத்தை விட அதிக வாக்குகள் பெற்றது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறுகையில், நாட்டிலேயே தமிழகத்தில் தான் திரைத்துறையினர் மீது மக்களுக்கு அதிக கவர்ச்சி உள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு இல்லை.

நடிகர்கள் ஏன் அரசியலுக்கு வருகிறார்கள்? மக்களுக்கான போராட்டம் எதிலும் நடிகர்கள் பங்கேற்பதில்லை. ஆனால் அரசியலுக்கு மட்டும் ஏன் வருகிறார்கள்

கட்சி தொடங்கிய பின்தான் கருத்து தெரிவிப்பேன் என்று கூறிய ரஜினிகாந்த் இப்போது மட்டும் மோடி வெற்றி குறித்து கருத்து கூறுகிறார்?

மோடி வெற்றி பெற்றதால் மட்டும் தனித்துவமான தலைவராகிவிட முடியாது என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்