இங்க இருக்குற தேர்தல் முறை... உலகமே காரி துப்புது: சீமான் கடும் பாய்ச்சல்

Report Print Arbin Arbin in இந்தியா

உலகமே நமது நாட்டு தேர்தல் முறையைப் பார்த்து காரித் துப்புகிறது. அப்படிதான் இருக்கிறது நமது லட்சணம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் ஆவேசமாக கூறியுள்ளார்.

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,

நடந்து முடிந்த தேர்தல் முறை குறித்து கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். நடத்தப்பட்ட தேர்தல் முறையானது அல்ல என்றும் எடுத்துரைத்தார்.

மேலும் பேசிய அவர், இந்த ஊடகத்தை பார்த்து ஒன்று கேட்கிறேன். உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் இந்த தேர்தல் முறையாக நடந்ததுன்னு.

தேர்தல் முறைப்படி நடந்ததா? தேர்தல் ஆணையம் முறையாகத்தான் செயல்பட்டதா?

நமது தேர்தல் முறையைப் பார்த்து உலகமே பார்த்து காரித்துப்புது. வாக்கு இயந்திரத்தை தயாரித்து கொடுக்கிற ஜப்பானே வாக்கு இயந்திர முறையை பின்பற்றவில்லை.

என்னைக்கோ அதை கைவிட்டுட்டு, வாக்கு சீட்டு முறையை பின்பற்ற ஆரம்பிச்சிட்டாங்க. ஆனா இங்கே?

வாக்கு இயந்திரத்தில் ஒரு தப்பும் நடக்காதுன்னு சொல்றதை எப்படி நம்பறது? இது எந்தமாதிரியான கட்டமைப்பு?" என கேள்விகளை அடுக்கியுள்ளார் சீமான்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெற்றிபெறவில்லை என்றாலும், தமிழகத்தில் தேர்தல் நடந்த 38 தொகுதிகளிலும் கணிசமான வாக்குகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்