நாடாளுமன்ற தேர்தல்: ராகுலுக்கு எதிராக சதிவலை வீசிய 4 காங்கிரஸ் தலைவர்கள்...?

Report Print Abisha in இந்தியா

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்களே, ராகுல் காந்திக்கு எதிராக சதி செய்ததாக பீகார் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஷ்யாம் சுந்தர் சிங் திராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மக்களவை தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து சிந்தித்து வரும் நிலையில், ஷ்யாம் சுந்தர் சிங் ராகுலுக்கு எதிரான சதித்திட்டம் குறித்து முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அவர், காங்கிரஸ் தலைவர்கள் 4 பேரின் கூட்டணி தான் காங்கிரசின் படுதோல்விக்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.

பாஜகவுக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக பிரச்சாரம் செய்வதாக உறுதி கூறிய அந்த நான்கு தலைவர்களும் தங்களது சொந்த கட்சிக்கு எதிராகவே வேலை செய்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ராகுலுக்கு எதிரான சதித்திட்டத்தில் ஈடுபட்டு துரோகிகளே, அவரை தலைவர் பதவியிலிருந்து விலகக் கூடாது என சமாதானமும் செய்வதாகவும் ஷ்யாம் சுந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த குறிப்பிட்ட நான்கு தலைவர்களின் பெயர்களும் வெளியிடவில்லை.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers