வயிற்றுவலி என மருத்துவமனைக்கு சென்ற நபர்: அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்

Report Print Vijay Amburore in இந்தியா

இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் அறுவை சிகிச்சைக்கு வந்த நபரின் வயிற்றில் 8 கரண்டிகள் மற்றும் ஒரு கத்தி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இமாச்சலப் பிரதேசத்தில் மண்டி என்ற கிராமத்தில் வசிக்கும் 35 வயதான நபர், கடந்த சில நாட்களுக்கு தாங்க முடியாத வயிற்று வலியுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் அவருடைய வயிற்றில் அதிகமான கரண்டிகள் மற்றும் ஆபத்தான நிலையில் கத்தி உள்ளிட்டவைகள் இருப்பதை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். 3 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையில், ஒரு கத்தி, எட்டு கரண்டி, இரண்டு ஸ்க்ரூவைட்ரேட்கள் மற்றும் இரண்டு பற்குச்சி ஆகியவற்றை அகற்றியுள்ளனர்.

அதோடு சேர்த்து ஒரு குறுகிய உருளை உலோக பட்டை உள்ளிட்ட எராளமான பொருட்களை வெளியில் எடுத்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவர் கூறுகையில், அந்த நபர் எப்படி அவற்றை சாப்பிட்டார் என்பது தெரியவில்லை. ஆனால் அவர் மனநலக்கோளாறால் துன்பப்பட்டிருக்கிறார் என்பதை மட்டும் புரிந்துகொள்ள முடிகிறது.

தற்போது அவர் குடும்பத்தாரால் தீவிரமாக பராமரிக்கப்பட்டு வருகிறார் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்