பிரசவத்திற்கு சென்றுகொண்டிருந்த கர்ப்பிணி மீது லொறி மோதியதில் சிசு பலி

Report Print Vijay Amburore in இந்தியா

விழுப்புரம் அருகே நிறைமாத கர்ப்பிணியுடன் பிரசவத்திற்காக சென்றுகொண்டிருந்த கார் மீது லொறி மோதியதில், வயிற்றில் இருந்த சிசு இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் பிரவீன். இவருடைய மனைவி பெஸ்ருதீன் (27) நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால், விழுப்புரத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் பெஸ்ருதீனுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனே பிரவீன், மனைவி மற்றும் உறவினர்களை அழைத்துக்கொண்டு தன்னுடைய காரில் புறப்பட்டுள்ளார்.

இரவு 11 மணிக்கு மது பாட்டில்களை ஏற்றிக்கொண்டு வந்த லொறி திடீரென கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், காரில் உயிருக்கு போராடிய 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், பெஸ்ருதீன் வயிற்றில் இருந்த சிசு இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தற்போது வழக்கு பதிவு செய்திருக்கும் பொலிஸார், லொறியில் இருந்து தப்பியோடிய ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்