மனைவியை தனி அறையில் அடைத்து வைத்து கணவன் செய்து வந்த கொடூர செயல்... பெற்றோரால் தப்பித்த சம்பவம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் வரதட்சனை வாங்கிவராத மனைவியை கணவன் தனி அறையில் அடைத்து வைத்து கொடுமை செய்துள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சென்னை கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர், எம்ஜிஆர் தெருவை சேர்ந்த தம்பதி பாலசேகர்-உமாம் மகேஸ்வரி.

இந்த தம்பதிக்கு கார்த்திகேயன்(30) என்ற மகன் உள்ளார். அவர் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

கார்த்திகேயனுக்கும், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த பரமேஸ்வரி (25 என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணத்தின் போது பரமேஸ்வரியின் பெற்றோர் 65 சவரன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுத்துள்ளனர். தம்பதிக்கு, தற்போது ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கூடுதல் வரதட்சணை கேட்டு பரமேஸ்வரியுடன் கார்த்திகேயன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அதற்கு அவர், திருமணத்தின் போது நகை, சீர்வரிசை என எல்லாவற்றையும் எனது பெற்றோர் கொடுத்து விட்டனரே, தற்போது மீண்டும் எப்படி அவர்களிடம் வரதட்சணை கேட்பது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கார்த்திகேயன், மனைவியை அடித்து உதைத்துள்ளார். இதுபற்றி வெளியில் யாரிடமும் கூறிவிட கூடாது என்பதற்காக, வீட்டில் உள்ள தனியறையில் மனைவி மற்றும் குழந்தையை அடைத்து வைத்து, சாப்பாடு கொடுக்காமல் சித்ரவதை செய்துள்ளார்.

ஆனாலும் ஆத்திரம் தீராத கார்த்திகேயன், மனைவி மற்றும் குழந்தைக்கு சூடு வைத்து, கொடுமை செய்துள்ளார்.

இதற்கு, மாமனார், மாமியாரும் உடந்தையாக இருந்துள்ளனர். இதற்கிடையில் கடந்த 2 மாதமாக பரமேஸ்வரியை, அவரது பெற்றோர் செல்போனில் தொடர்பு கொண்டும், பரமேஸ்வரியிடம் பேச முடியவில்லை.

இதனால், சந்தேகமடைந்த அவர்கள், உறவினர்களுடன் பரமேஸ்வரியை பார்க்க விட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது கார்த்திகேயன் மனைவி வீட்டில் இல்லை, வெளியில் சென்றுள்ளார் என்று கூறியுள்ளார்.

அந்த நேரத்தில் ஒரு அறையில் இருந்து கதவு தட்டும் சத்தம் கேட்டுள்ளது. உடனே பெற்றோர் அங்கு சென்றபோது, உள்ளே பரமேஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டது.

இதனால், கதவை திறக்கும்படி கார்த்திகேயனிடம் கூறியுள்ளனர். ஆனால், அவர் திறக்கவில்லை. இதையடுத்து பெற்றோர், காவல்நிலையத்தில் புகார் அளிக்க, விரைந்து வந்த பொலிசார் வீட்டின் கதவை திறந்து பரமேஸ்வரியை மீட்ட்னர்.

அப்போது அவர், தனக்கு நடந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். பின்னர் அவரையும், குழந்தையையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அதன் பின் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...