மோடி அமைச்சரவையில் எத்தனை கோடீஸ்வரர்கள் தெரியுமா? சொத்து மதிப்பு? வெளியான முக்கிய தகவல்

Report Print Santhan in இந்தியா

இந்திய பிரதமர் மோடி அமைச்சரவையில் 51 பேர் கோடீஸ்வரர்கள் எனவும் 22 பேர் மீது கிரிமினல் குற்றச்சாட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவை தேர்தல் முடிவில் மத்தியில் ஆட்சி பாஜக மத்தியில் ஆட்சி அமைக்கிறது. இதில் பிரதமராக மோடி மீண்டும் பதிவி ஏற்றுக் கொண்டார். அதன் பின் அமைச்சர்களின் பட்டியலும் வெளியானது.

இந்நிலையில், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு வேட்பு மனுக்களை கொண்டு நடத்திய ஆய்வில், மொத்தம் 56 அமைச்சர்களின் வேட்புமனுக்களை ஆராய்ந்ததில், 22 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர 16 பேர் மீது கொலை முயற்சி, சமூக நல்லிணக்கத்துக்கு தீங்கு விளைவித்தல், தேர்தல் விதிமீறல் போன்ற குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

கடந்த அமைச்சரவையுடன் ஒப்பிடுகையில் இம்முறை குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையில் 51 பேர் கோடீஸ்வரர்கள் என்றும் அமித் ஷா, பியுஷ் கோயல், ஹர்சிம்ரத் கவுர் பாதல் ஆகியோருக்கு 40 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஒரு கோடி ரூபாய்க்கு கீழ் சொத்துள்ள அமைச்சர்கள் 5 பேர் மட்டுமே என்றும் ஒடிஷாவில் இருந்து தேர்வான பிரதாப் சந்திர சாரங்கியின் சொத்து மதிப்பு 13 லட்சம் ரூபாய் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்