காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி ஒரு மனதாக தெரிவு!

Report Print Kabilan in இந்தியா

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக, சோனியா காந்தி ஒரு மனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க கூட்டணி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நரேந்திர மோடி இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராகியுள்ளார்.

பா.ஜ.க 303 இடங்களை வென்ற நிலையில், காங்கிரஸ் வெறும் 52 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. தோல்வியைத் தொடர்ந்து, கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார்.

இதனால் அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடந்து வரும் நிலையில், டெல்லியில் காங்கிரஸ் கட்சி சார்பில் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட மக்களவை அமைச்சர்களின் முதல் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்றக் குழு தலைவராக சோனியா காந்தியின் பெயரை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பரிந்துரைத்தார். அதனைத் தொடர்ந்து, அவர் ஒரு மனதாக தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

இதன்மூலம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் காங்கிரஸ் அமைச்சர்களுக்கும் அவர் தலைவராக இருப்பார் என்று தெரிகிறது. ராகுல் காந்தியின் தலைமையில் கூடிய இந்த கூட்டத்தில், காங்கிரஸின் 52 மக்களவை அமைச்சர்களுடன், மாநிலங்களவை அமைச்சர்களும் பங்கேற்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers