தாலி கட்டும் நேரத்தில் தற்கொலை செய்துகொண்ட மணமகன்: சோகத்தில் முடிந்த மண விழா

Report Print Vijay Amburore in இந்தியா

ஐதராபாத்தில் தாலி கட்டுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் மணமகன் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத் மாநிலத்தை சேர்ந்த 25 வயதான டொமினிக் ரோசாரியோ பிரபலமான தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார்.

வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வந்த உடன் திருமணம் செய்துகொள்ளலாம் என டொமினிக் மற்றும் அவருடைய 22 வயது காதலி, இரண்டு வருடங்களுக்கு முன் முடிவு செய்திருந்தனர்.

ஆனால் அவருடைய காதலி உடனே திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது. இதனால் ஜூன் 1ம் திகதி திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

அன்றைய தினம் தாலி கட்டுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக மணமகன் திடீரென தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார்.

மணமகள் கொடுத்த அழுத்தம் காரணமாகவே தன்னுடைய மகன் இறந்துவிட்டதாக டொமினிக் தந்தை டேவிட் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்