சென்னையில் மனைவியுடன் செல்போன் கடைக்கு சென்ற நடிகர் செய்த செயல்... சிசிடிவி உதவியால் வசமாக சிக்கினார்

Report Print Raju Raju in இந்தியா

சென்னையில் மனைவியுடன் டிப் டாப் உடையணிந்து செல்போன் கடைக்குள் புகுந்து விலையுயர்ந்த செல்போன்களை திருடிய நடிகர், சிசிடிவி கமெராவின் உதவியால் வசமாக சிக்கினார்.

சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்தவர் ஆருண் என்ற தீபக் (28). இவர் சின்னத்திரையில் துணை நடிகராக உள்ளார். ஆருணும், அவரது மனைவியும் செல்போன் கடைகளுக்கு சென்று உயர் ரக செல்போன்களை திருடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

அதேபோல் நேற்று, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள செல்போன் கடைக்கு இருவரும் செல்போன் வாங்குவதுபோல் சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்த விலையுயர்ந்த செல்போன்களை திருடும்போது, சிசிடிவி கமெராவை பார்த்த கடை ஊழியர்கள், இருவரையும் கையும் களவுமாக பிடித்து அரும்பாக்கம் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், ஆருணும், அவரது மனைவியும் செல்போன் வாங்குவது போல் அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு சென்று செல்போனை வாங்கி பார்ப்பர்.

பின்னர் ஊழியர் மற்றொரு வாடிக்கையாளரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விலை உயர்ந்த செல்போன்களை ஆருண் திருடியது தெரியவந்தது.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்