ஆசையாக வளர்த்த ஒரே மகள் போய்விட்டாளே! துடித்து போன பெற்றோர் அடுத்தடுத்த நாளில் உயிரிழந்த சோகம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் மகள் இறந்த சோகத்தில் இருந்த பெற்றோர், அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொன்னேரியை அடுத்த பெரும்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (42). இவரது மனைவி சுமதி (38).

ஆறு மாதங்களுக்கு முன், இவர்களது மகள் தேவி (17) விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஆசையாக வளர்த்த மகள் இறந்த சோகத்தில், குமாரும், அவரது மனைவியும் விரக்தியாக இருந்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த, 6ம் திகதி சுமதி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார். பலத்த தீக்காயங்களுடன், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் நேற்று முன்தினம் இறந்தார்.

நேற்று காலை பெரும்பேடு ஏரிக்கரை பகுதியில் உள்ள மரம் ஒன்றில், குமார் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

மகள் இறந்த விரக்தியில் பெற்றோர் இருவரும் அடுத்தடுத்த நாளில் உயிரிழந்தது ஊர் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவர்களின் உடல்கள் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஒரே நேரத்தில் அடக்கம் செய்யப்பட்டன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்