அரபிக் கடலில் உருவானது வாயு புயல் : இந்த பகுதியில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு...!

Report Print Kavitha in இந்தியா

தென்கிழக்கு அரேபிக் கடலில் வாயு புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

குறித்த வாயு புயல் குஜராத்தின் போர்பந்தர் மற்றும் மஹூவா பகுதியில் ஜுன் 13 இல் வாயு புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஜுன் 13 ஆம் தேதி 135 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாயு புயலானது வடக்கு நோக்கி நகரும் எனவும் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் எனவும் புயல் கரையை கடக்கும் போது 110 கி.மீ முதல் 120 கி.மீ வரை காற்றின் வேகம் இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனால் வருகிற 13 மற்றும் 14-ந்தேதி குஜராத்தில் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் குறிப்பாக கடலோர பகுதியான சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கனமழை பெய்யும் என்பதால் தேசிய பேரிடர் மீட்புக் குழுவுடன் ராணுவம், கப்பல்படை மற்றும் கடலோர பாதுகாப்புப் படைகளை குவிக்கப்பட்டு குஜராத் அரசு தீவிரம் காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்