சிறையில் இருந்து தண்டனை காலத்துக்கு முன்னரே விடுதலையாகும் சசிகலா?

Report Print Raju Raju in இந்தியா

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவை நன்னடத்தை அடிப்படையில் தண்டனை காலத்துக்கு முன்பே விடுவிக்க கர்நாடக அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 1991 - 1995 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரும், குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஜெயலலிதா மரணம் அடைந்ததால், மீதமுள்ள 3 பேருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து சசிகலா உள்ளிட்ட 4 பேரும் கடந்த 2017ம் ஆண்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், நன்னடத்தை அடிப்படையில் ஓராண்டுக்கு முன்பே சசிகலாவை விடுதலை செய்ய சிறைத்துறை நிர்வாகம், கர்நாடக மாநில அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

2020ம் ஆண்டு பிப்ரவரி 14ம் திகதி சசிகலாவின் தண்டனை காலம் 3 ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில், கர்நாடக அரசு ஒப்புதல் அளித்தால், அவர் வரும் டிசம்பர் மாதம் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்