இயக்குநர் பா.ரஞ்சித் மீது குவியும் வழக்குகள்

Report Print Basu in இந்தியா

சோழப் பேரரசர் ராஜராஜ சோழன் பற்றி இயக்குநர் பா. ரஞ்சித் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவருக்கு எதிராக பலர் வழக்கு தொடுத்துள்ளனர்.

கடந்த 5ம் திகதி தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், மன்னர் ராஜ ராஜ சோழந்தான் மக்களிடம் இருந்து நிலங்களை அபகரித்தவர். அவரது ஆட்சியில்தான் ஜாதி பிளவு கட்டமைக்கப் பட்டது. தேவதாசி முறை கூட அவரது ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டது.

தற்போது ராஜ ராஜ சோழன் தங்கள் சாதிக்காரர் என்று 8 ஜாதியினர் சொந்தம் கொண்டாடுகின்றனர். அவரது ஆட்சிதான் இருப்பதிலேயே இருண்ட ஆட்சி என பேசினார். ரஞ்சித்தின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் அவர் மீது சாதி மத இன மொழி சம்பந்தமாக விரோத உணர்ச்சிகளை தூண்டுதல் மற்றும் கலகம் செய்ய தூண்டுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் பாலா அளித்த புகாரின் பேரில் ரஞ்சித் மீது இரண்டாவதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது, ராஜ ராஜ சோழனை பற்றி தவறான கருத்தை பரப்பியதாக பா.ரஞ்சித் மீது பாஜக நகர தலைவர் தலைமையில், மயிலாடுதுறை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித்தை விசாரணைக்கு அழைக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers