நீதிமன்றத்தில் வைத்து பார் கவுன்சில் பெண் தலைவருக்கு நேர்ந்த கதி.. உ.பி-யில் என்ன நடக்கிறது?

Report Print Basu in இந்தியா

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பார் கவுன்சில் பெண் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆகரா நீதிமன்ற வளாகத்தில் வைத்தே இக்கொலை சம்பவம் நடந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் தான் தர்வீஷ் யாதவ் என்ற பெண் உத்தரப் பிரதேச பார் கவுன்சிலின் தலைவராக பதவியேற்றார்.

உத்தரப் பிரதேச பார் கவுன்சிலின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை தர்வீஷ் யாதவ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கறிஞர் மனிஷ் சர்மா என்பவரே இத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

வழக்கிறஞர் அரவிந்த குமார், அறைக்குள் தர்வீஷ் யாதவ் உரையாடிக்கொண்டிருந்த போது, மனிஷ் சர்மா துப்பாக்கியால் யாதவை சுட்டுள்ளார். பின்னர், மனிஷ் தன்னை தானே சுட்டுக்கொண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தை அடுத்து, Oudh பார் சங்கம் அவசர கூட்டத்தை கூட்டினர். இக்கூட்டத்தில் யாதவ் கொலைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தாக்குதலை கண்டித்து நாளை பணிக்கு செல்லாமல் போராட்டம் நடத்த Oudh பார் சங்கம் முடிவு செய்துள்ளது.

மேலும், இக்கொலை சம்பவம் தொடர்பாக மாநில அரசு சிறப்பு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என Oudh பார் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers