மாயமான இந்திய போர் விமானத்திலிருந்து 13 பேரின் நிலை என்ன? தகவல் வெளியானது

Report Print Basu in இந்தியா
216Shares

13 பேருடன் மாயமான விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், விமானத்தில் பயணித்தவர்களின் நிலை குறித்து இந்திய விமானப்படை தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த யூன் 3ம் திகதி அசாமின் ஜோர்கத் பகுதியிலிருந்து அருணாச்சலப் பிரதேசத்தின் மெஞ்சுக்கா பகுதிக்கு 13 பேருடன் சென்ற இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக போர் விமானம் காணாமல் போனது.

மாயமான விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், கடந்த யூன் 11ம் திகதி அருணாச்சல் பிரதேச மாநிலத்தின் சியாங் மாவட்டம் கட்டி என்ற கிராமம் அருகே 13பேருடன் காணாமல்போன ஏ.என்.32 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், விமானத்தில் பயணித்த வீரர்களின் நிலை குறித்து அறிய, 8 பேர் கொண்ட மீட்புக்குழு விமானம் விபத்துக்குள்ளான பகுதியை இன்று அடைந்துள்ளனர். விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த ஒருவர் கூட உயிர் தப்பவில்லை என இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.

சார்லஸ், வினோத், தாபா, மோகன்டி, கார்க், மிஸ்ரா, சேரின், எஸ்.கே.சிங், தன்வர், அனூப் குமார், அபங்கஜ், புடாலி மற்றும் ராஜேஷ் குமார் ஆகிய வீரர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளதாக இந்திய விமானப்படை தகவல் வெளியிட்டுள்ளது.

உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ள இந்திய விமானப்படை, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் விமானப்படை ஆதரவாக இருக்கும், உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்