திருமணமாகி குழந்தை உள்ள நபருக்கு உறவுக்கார மாணவி மீது ஏற்பட்ட ஆசை.. நேர்ந்த விபரீதம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் கல்லூரி மாணவி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியை சேர்ந்தவர் மலர்விழி மீரா (20). இவர் பொறியியல் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்தார்.

மலர்விழி நேற்று மாலை கல்லூரி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் அவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்ட நிலையில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தினார்.

இதில் மலர்விழி இரத்தவெள்ளத்தில் துடிதுடித்து கீழே சாய்ந்தார்.

உடனடியாக அந்த பகுதியினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

இதற்கிடையே கத்தியால் குத்திய வாலிபரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்து வந்த பொலிசார் வாலிபரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

விசாரணையில் அவரின் பெயர் முரளி (34) என்பதும், அவர் மலர்விழியின் உறவினர் என்பதும் அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளதும் தெரியவந்தது. சென்னையில் வேலை பார்த்து வரும் அவர், மலர்விழியை ஒருதலையாக காதலித்து வந்தார்.

காதலை அவர் ஏற்காததால் ஆத்திரம் அடைந்து அவரை கத்தியால் குத்தி வெறிச்செயலில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers