இப்போ இது முக்கியமா? ரஞ்சித்துக்கு சீமான் நறுக் கேள்வி

Report Print Basu in இந்தியா

ராஜராஜ சோழனின் காலத்தை இருண்ட காலம் என பேசிய இயக்குநர் பா.ரஞ்சித்திற்கு, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி ஒன்றை முன்வைத்துள்ளார்.

இயக்குநர் ரஞ்சித் நாட்டின் மிகப்பெரிய பிரச்சினையான அணுக்கழிவு குறித்துப் பேசாமல், ஏன் ஆயிரம் வருடப் பழமையான அரசன் குறித்துக் கேள்வி எழுப்ப வேண்டும் என்று சீமான் கேட்டுள்ளார்.

இதுகுறித்து திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வரலாற்றில் இருந்து படிக்கும்போது ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை இருக்கும். ராஜராஜ சோழனின் காலத்தை நாங்கள் தமிழ்ச் சமூகத்தின் பெருமைமிக்க காலமாக பார்க்கிறோம். ஆனால், பொற்காலம் என்று எதையும் நாங்கள் சொன்னதில்லை.

ரஞ்சித், தனது பார்வையில் ராஜராஜ சோழனின் காலத்தை இருண்ட காலமாகப் பார்க்கிறார். எவ்வளவு விமர்சனங்கள் வைத்தாலும் அருள்மொழிச் சோழன் என்கிற ராஜராஜ சோழன், அரசர்க்கரசன் எங்களுடைய பெருமைக்குரிய பாட்டன்தான். ரஞ்சித்தின் குற்றச்சாட்டுக்கு, மணியரசன் ஆதாரப்பூர்வமாகப் பதிவுகளை எடுத்து வைக்கிறார்.

ஆனால் எங்களின் கேள்வி, நாட்டின் மிகப்பெரிய பிரச்சினையான அணுக்கழிவு குறித்துப் பேசாமல் இயக்குநர் ரஞ்சித், ஏன் ஆயிரம் வருடப் பழமையான அரசன் குறித்துக் கேள்வி எழுப்ப வேண்டும் என சீமான் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers