திருமணம் செய்ய மறுத்த இளைஞன் மீது ஆசிட் வீசிய பெண்...!

Report Print Abisha in இந்தியா

காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது இளம்பெண் ஆசிட் வீசிய சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில், விகாஸ்பூரி என்ற இடத்தில் மருத்துவமனை ஒன்றில் இளம்பெண் ஒருவரும், இளைஞரும் காயங்களுடன் சிகிச்சைக்காக வந்துள்ளனர்.

பெரிய அளவில் காயத்துடன் வந்ததால், இதுபற்றி தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அந்தப் பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இருவரும் காதலர்கள் என்பது தெரியவந்தது.

எதனால், காதலனுக்க இவ்வளவு காயம் ஏற்பட்டது என்பது குறித்து விசாரிக்கையில், அந்த பெண்ணை காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரமடைந்த பெண் காதலன் மீது ஆசிட் வீசியதை ஒப்பு கொண்டார்.

ஆசிட் வீச்சில் அந்த இளைஞனுக்கு முகம், கழுத்து மற்றும் மார்புப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

மேலும் அந்தப் பெண்ணுக்கும் கைகளில் காயம் இருந்தது. இதையடுத்து அந்தப் பெண்ணைக் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers