பாஜக தேசிய தலைவர் பதவி: அமித் ஷா அவுட்.. ஜே.பி.நட்டா இன்

Report Print Basu in இந்தியா

பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பாஜக ஆட்சிமன்றக் குழுவின் கூட்டத்தில் அக்கட்சியின் புதிய தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாஜகவில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற முறை பின்பற்றப்பட்டு வருவதால், மத்திய உள்துறை அமைச்சர் பதவியை அமித் ஷா ஏற்ற நிலையில், அவர் வகித்து வந்த கட்சித் தலைவர் பதவி ஜே.பி.நட்டாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

56 வயதான ஜே.பி. நட்டா இமாச்சலப் பிரதேசத்தின் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர், பாஜக மூத்த தலைவர்களின் அன்பையும், மரியாதையையும், நம்பிக்கையையும் பெற்றவர். குறிப்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் நம்பிக்கையைப் பெற்றவர்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், அமித் ஷா உள்துறை அமைச்சராகப் பதவியேற்ற நிலையில், பாஜக தலைவர் பதவியை வேறு ஒருவருக்கு கொடுக்க வேண்டும் என்று கூறிவந்தார். அதன்படி, ஜே.பி.நட்டா பாஜகவின் தேசிய செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers