வீட்டியில் யாரும் இல்லாதபோது கட்டிலில் படுத்து டிவி பார்த்த பாம்பு!

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தில் வீட்டுக்குள் புகுந்த நல்லபாம்பு ஒன்று, கட்டிலில் படுத்துக்கொண்டு டி.வி பார்த்துக் கொண்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலூர் மாவட்டம் சோனாங்குப்பத்தில் வசிப்பவர் பிச்சாண்டி. இவரது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் நல்ல பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. பின்னர் ஏர் கூலர் அருகே உள்ள கட்டிலில் படுத்துக்கொண்டு அந்த பாம்பு டி.வியை நோக்கி படமெடுத்தபடி பார்த்துக் கொண்டிருந்தது.

இதனைக் கண்ட பிச்சாண்டியின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து, வனவிலங்கு ஆர்வலருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த வனவிலங்கு ஆர்வலர், நல்லபாம்பை கச்சிதமாக பிடித்துச் சென்றார்.

பின்னர், பாம்பை கொண்டு சென்று வனப்பகுதிக்குள் விட்டார். முன்னதாக, வனவிலங்கு ஆர்வலர் வரும்வரை, அந்த பாம்பு பிச்சாண்டி குடும்பத்தினரை நோக்கியும், டி.வியை நோக்கியும் படமெடுத்தபடியும் இருந்தது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers