விபத்துக்குள்ளான இந்திய விமானம்.. உடல்களை மீட்கும் பணியில் புதிய திருப்புமுனை

Report Print Basu in இந்தியா

13பேருடன் காணாமல்போன ஏ.என்.32 ரக போர் விமானம் விபத்துக்குள்ளான இடத்திலிருந்து 6 பேரின் உடல்களும், 7 பேரின் உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த யூன் 3ம் திகதி அசாமின் ஜோர்கத் பகுதியிலிருந்து அருணாச்சலப் பிரதேசத்தின் மெஞ்சுக்கா பகுதிக்கு 13 பேருடன் சென்ற இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக போர் விமானம் காணாமல் போனது.

கடந்த யூன் 11ம் திகதி அருணாச்சல் பிரதேச மாநிலத்தின் சியாங் மாவட்டம் கட்டி என்ற கிராமம் அருகே 13பேருடன் காணாமல்போன ஏ.என்.32 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது.

விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், உடல்களை மீட்க, மீட்பு குழுவினர் சம்பவயிடத்திற்கு விரைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். தொடரந்து தேடுதல் பணி நடைபெற்று வந்த நிலையில் 6 பேரின் உடல்கள், 7 பேரின் உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விபத்துக்குள்ளான இடத்தில் மோசமான காலநிலை நிலவி வந்ததாலே தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டதாக இந்திய விமானப்படை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்