பள்ளத்தாக்கில் விழுந்த நொறுங்கிய பேருந்து.. பலி எண்ணிக்கை 33 ஆக அதிகரிப்பு

Report Print Basu in இந்தியா

இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் தனியார் பயணிகள் பேருந்து ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.

குலு மாவட்டத்தின் பஞ்சார் பகுதிக்கு அருகே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. பஞ்சாரிலிருந்து கடகுஷானி பகுதிக்கு சென்றுக்கொண்டிருந்த தனியார் பேருந்தே இவ்வாறு பள்ளத்தாக்கில் விழுந்துள்ளது.

தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்விபத்தில் சிக்கி உயிரிழந்த 25 பேரின் உடல்கள் மீட்க்கப்பட்டதாக குலு மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் முதற்கட்ட தகவலை தெரிவித்தார்.

இந்நிலையில், தற்போது விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், 37 காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்த தகவல்கள் தற்போது வரை வெளியாகவில்லை.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்