44பேரை பலிவாங்கிய கோர விபத்து... நீதிவிசாரணைக்கு உத்தவிட்ட முதலமைச்சர்

Report Print Abisha in இந்தியா

இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் தனியார் பயணிகள் பேருந்து ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.

குலு மாவட்டத்தின் பஞ்சார் பகுதிக்கு அருகே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. பஞ்சாரிலிருந்து கடகுஷானி பகுதிக்கு சென்றுக்கொண்டிருந்த தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.

தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் காயம் அடைந்த 34 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கோர விபத்து குறித்து நீதி விசாரணைக்கு அம்மாநில முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர் உத்தரவிட்டுள்ளார்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்