நிகழ்ச்சியின் போது திடீரென பந்தல் சரிந்து விழுந்ததில் 14 பேர் பலி!

Report Print Vijay Amburore in இந்தியா

ராஜஸ்தான் மாநிலத்தில் ராமாயண கதாகாலேட்சேபம் நிகழ்ச்சியின் போது திடீரென பந்தல் சரிந்து விழுந்ததில் 14 பேர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜசோல் கிராமத்தில் உள்ள பள்ளியில் இன்று ராமாயண கதாகாலேட்சேபம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியினை கண்டுகளித்தனர். இதற்காக மிகப்பெரிய அளவிலான பந்தல்கள் போடப்பட்டிருந்தன.

நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் திடீரெனெ பந்தல் சரிந்து விழுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அங்கிருந்து தப்பியோட நினைத்து, ஒருவர் மற்றொருவர் மீது மோதி நிலைகுலைந்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர், விபத்தில் உயிரிழந்த 14 பேரையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயங்களுடன் கிடந்த 24 பேரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் அறிந்த ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லோட், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டியும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்