பள்ளி முடிந்து வீடு திரும்பிய போது ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த தாய்.. அலறிய குழந்தைகள்!

Report Print Vijay Amburore in இந்தியா

நெல்லை மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண் சரமாரியாக கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கோமதிநாயகம் - முத்துமாரி தம்பதியினருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

வியாழக்கிழமை காலை கோமதிநாயகம் வழக்கம் போல வேலைக்கு சென்றுவிட்டார். அவருடைய மனைவி முத்துமாரி, தன்னுடைய குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அங்கு மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய குழந்தைகள், சரமாரியாக கத்தியால் குத்தப்பட்டு ரத்த காயங்களுடன் தாய் இறந்துகிடப்பதை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அங்கிருந்து அலறியபடியே அக்கம்பக்கத்து வீட்டர்களிடம், தாய் இறந்துகிடப்பதாக கூறியுள்ளார்.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், முத்துமாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மூன்று மணியளவில் கோமதிநாயகம் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். 4.30 மணிக்கு அவருடைய குழந்தைகள் பள்ளியிலிருந்து வருகை தந்துள்ளனர்.

இதற்கிடையில் தான் மர்ம நபர் வீட்டிற்கு வந்து கொலை செய்துள்ளார்.

முத்துமாரியின் கழுத்து அறுக்கப்பட்டு அவருடைய நகை அப்படியே விடப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த எந்த பொருட்களும் களவு போகவில்லை. அவருடைய மார்பு, வயிற்று பகுதியில் பலத்த கத்திக்குத்து காயங்கள் இருந்தன.

இதனால் நன்கு தெரிந்த நபர் அலல்து உறவினர் யாரேனும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்