நண்பரின் மனைவியை திருமணம் செய்து கொண்ட நபர்.. ஆறு மாதத்தில் நடந்த சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் நண்பரின் மனைவியை திருமணம் செய்து கொண்ட ஓட்டுனர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், அழகியமண்டபம் பனங்காலவிளையைச் சேர்ந்தவர் அஜித் (29). ஜே.சி.பி. ஆபரேட்டர்.

இவர் அதே பகுதியைச் சேர்ந்த சஜிதா (28) என்ற பெண்ணை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சஜிதா ஏற்கனவே திருமணம் ஆகி கணவரை இழந்தவர். அவர் கணவரின் நண்பரான அஜித் சஜிதாவுக்கு உதவிகள் செய்து வந்தார். நாளடைவில் அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. பின்னர் சஜிதாவையே அஜித் திருமணம் செய்து கொண்டார்.

அஜித்துக்கு குடிப்பழக்கம் இருந்த நிலையில் அதை சஜிதா கண்டித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவும் அஜித் குடித்து விட்டு வந்த போது, கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

பின்னர் சஜிதா வீட்டுக்கு வெளியே சென்று அழுது கொண்டு நின்றார். அப்போது திடீரென அஜித் வீட்டுக்குள் சென்று கதவை பூட்டினார். பின்னர் சஜிதாவின் சுடிதார் துப்பாட்டாவால் தூக்குப்போட்டு தொங்கினார்.

வீட்டுக்குள் சென்ற கணவரை காணாதது கண்டு சஜிதா ஓடி வந்தார். அப்போது அஜித் தூக்கில் தொங்கியபடி உயிருக்கு போராடினார். அதை பார்த்து சஜிதா சத்தம் போட்டு அலறினார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்ததோடு அஜித்தை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாக தகவலறிந்த பொலிசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers