நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற 243 இலங்கை தமிழர்களின் கதி என்ன? ஆறு மாதங்களாக தொடரும் மர்மம்

Report Print Basu in இந்தியா

இந்தியாவின் கேரள மாநில கொச்சின் துறைமுகத்திலிருந்து நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கை தமிழர்கள் 243 பேரை கடந்த ஆறு மாதங்களாக காணவில்லை.

கடந்த ஜனவரி மாதம் கொச்சியில் இருந்து படகு மூலம் நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற 243 இலங்கை தமிழர்கள் குறித்து இன்று வரை எந்த தடயமும் கிடைக்கவில்லை என உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.காணாமல் போன 243 பேரில் 164 பேர் டெல்லியில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

காணாமல் போன தங்கள் உறவினர்களைக் கண்டுபிடிக்குமாறு அரசாங்கத்திடம் முறையிட்டு, இன்றுவரை எந்த தடயமும் கிடைக்கவில்லை. அரசாங்கத்திடமிருந்து எங்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை, இந்த விடயத்தில் கவனம் செலுத்துமாறு அவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம் என 243 பேரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து விசாரித்துவரும் கேரள பொலிஸ், இவர்களை நியூசிலாந்துக்கு அனுப்ப உதவிய 10 பேரை கைது செய்துள்ளோம் என்றும், மூன்று பேரை தேடி வருகிறோம் என்றும் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்