நண்பனின் மனைவி மீது ஏற்பட்ட தீராத காதல்: இளைஞர் செய்த கொடுஞ்செயல்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய தலைநகர் டெல்லியில் நண்பனின் மனைவிக்காக இளைஞர் ஒருவர் நண்பனையே கொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது,

டெல்லியின் பிரேம்நகர் பகுதியில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. அண்டை வீட்டில் குடியிருப்பவரும் நண்பருமான 30 வயது தல்பீர் என்பவரையே குல்கேஷ் என்பவர் கொலை செய்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் குல்கேஷ் பொலிசாரிடம் சிக்கியுள்ளார். தல்பீரின் மனைவி பூஜா என்பவருடன் குல்கேஷ் கொண்டுள்ள தவறான உறவே இந்த கொலைக்கு காரணம் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

குல்கேஷும் பூஜாவும் நெருக்கமாக பழகி வந்தாலும், திருமண செய்துகொள்ள பூஜா மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இதனால் பூஜாவை திருமணம் செய்ய தல்பீரை கொலை செய்யும் முடிவுக்கு குல்கேஷ் வந்துள்ளார்.

குடும்ப விவகாரம் தொடர்பில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என கூறி தல்பீரை அழைத்து சென்ற குல்கேஷ்,

கல்லால் தலையில் அடித்து தல்பீரை கொலை செய்து, பின்னர் ரயில் தண்டவாளத்தில் விட்டுவிட்டு தப்பியுள்ளார்.

பின்னர், பொலிசாரை அழைத்து, தமக்கு அறிமுகமான ஒருவரின் சடலம் ரயில் தண்டவாளத்தில் கிடப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.

சம்பவ பகுதிக்கு சென்ற பொலிசார் ரயில் மோதி சிதறிய நிலையில் தல்பீரின் உடலை கைப்பற்றியுள்ளனர்.

மேலும் மர்ம கும்பல் ஒன்று தமது நண்பரை கொலை செய்துவிட்டு தப்பியதாக குல்கேஷ் பொலிசாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆனால், குல்கேஷின் சட்டையில் இருந்த சில துளி ரத்தக்கறைகள் தொடர்பில் பொலிசார் மேற்கொண்ட விசாரணைக்கு அவரால் உரிய பதில் தர முடியாமல் போயுள்ளது.

இதனையடுத்து குல்கேஷிடம் தீவிரமாக நடத்தப்பட்ட விசாரணையில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.

மட்டுமின்றி, பூஜா மீது தமக்கிருந்த காதலே நண்பரை கொலை செய்யும் அளவுக்கு தூண்டியது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்