கேரளாவில் குளியலறைக்கு சென்ற 2 பெண்கள்!பின்னர் நடந்தது? வெளியான புகைப்படங்கள்

Report Print Raju Raju in இந்தியா

கேரளாவில் சிறை சுவரில் ஏறிக்குதித்து இரண்டு பெண் கைதிகள் தப்பித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் திருவனந்தபுரம் அருகே அட்டகுளங்கரை பகுதியில் பெண்கள் சிறை உள்ளது.

இந்த சிறையில் உள்ள கைதிகளின் கணக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. அப்போது திருட்டு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தியா, ஷில்பா என்ற இரு கைதிகள் மாயமானது தெரிய வந்தது.

இதையடுத்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெரா காட்சிகள் மூலம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது மாலை 4.30 மணிக்கு சந்தியாவும், ஷில்பாவும் குளியல் அறை பகுதிக்கு செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

அந்த பகுதியில் தான் சிறையில் குவியும் குப்பைகளை அங்குள்ள சுவர் அருகே கொட்டி வைப்பார்கள்.

இதனால் அந்த பகுதி மேடாக காட்சி அளிக்கும். இதை பயன்படுத்தி இருவரும் சிறையின் சுவர் ஏறி குதித்து தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது.

இதை தொடர்ந்து இருவரது புகைப்படங்களையும் வெளியிட்டுள்ள பொலிசார் அவர்களை கைது செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்