தந்தையின் இறுதிச்சடங்கிற்கு வராமல் இளம் பெண் செய்த நெகிழ்ச்சி செயல்... குவியும் பாராட்டு

Report Print Santhan in இந்தியா
887Shares

தந்தையின் இறுதிச் சடங்கில் கூட பங்கேற்காமல் நாட்டிற்காக விளையாடிவிட்டு வீடு திரும்பிய அவர் தாயை கட்டிப் பிடித்து கதறி அழுத வீடியோக் காட்சி வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மிசோரம் மாநிலத்தில் இருந்து இந்திய மகளிர் அணிக்காக லால்ரெம் ஸியாமி என்ற 19 வயது இளம் பெண் விளையாடி வருகிறார்.

இவர் ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடந்த ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான ஹாக்கி தொடரில், விளையாடி வந்தார்.

இந்நிலையில் அவரது தந்தை கடந்த வெள்ளிக்கிழமை திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இதை அறிந்தும், அணியின் ஒலிம்பிக் கனவை மனதில் வைத்து தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதில்லை என்று அவர் முடிவு எடுத்தார்.

இறுதியில் ஜப்பானை வீழ்த்தி வெற்றி வாகை சூடி, இந்திய மகளிர் ஹாக்கி அணி நாடு திரும்பியது. மிசோரமில் உள்ள வீட்டிற்குச் சென்ற லால்ரெம் ஸியாமியை அவரது தாயாரை கட்டிப் பிடித்து அழுதுள்ளார்.

தந்தையை இறந்தது தெரிந்தும் நாட்டிற்காக விளையாடிய லால்ரெம் ஸியாமிவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்