நிச்சயிக்கப்பட்ட திருமணம்! வருங்கால மனைவியின் செயலால் புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தன்னை சிறையில் தள்ளியதால் அவமானத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் துண்டகட்டளை கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (32).

இவர் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் இவர் ஹேமாஸ்ரீ (25) என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார்.

இருவீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது.

இதன்பின்னர் இருவருக்கும் இடையே திடீரென கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் சதீஷ்குமார் தன்னை ஏமாற்றி விட்டு திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார் என்று ஹேமா பொலிசில் புகார் செய்தார். அதன்பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து கடந்த மாதம் 28-ம் திகதி சதீஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சதீஷ்குமார் ஜாமீனில் வெளியில் வந்தார்.

காதலியால் சிறை சென்றதால் அவர் மிகவும் வேதனையுடன் காணப்பட்ட நிலையில் நேற்று அவமானத்தால் விரக்தி அடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் சதீஷ்குமாரின் சடலத்தை கைப்பற்றிவிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers