நாம் தமிழர் கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட்ட மன்சூர் அலிகான் செய்த அதிரடி செயல்

Report Print Raju Raju in இந்தியா

தேர்தலில் வாக்குகள் பதிவாகும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைக்கேடு நிகழ்த்தமுடியும் என்றும் அதை நிரூபித்துக் காட்ட தனக்கு அவகாசம் தரும்படியும் நடிகர் மன்சூர் அலிகான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டவர் நடிகர் மன்சூர் அலிகான்.

தேர்தல் முடிவில் அவர் 54,957 வாக்குகள் பெற்று நான்காம் இடத்தை பிடித்தார்.

இருப்பினும் தோல்வியால் துவளாத மன்சூர் அலிகான் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.

அதாவது, தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது மற்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி நடந்துள்ளது என்றும் குற்றம்சாட்டியுள்ள மன்சூர் அலிகான் வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் இதுதொடர்பாக உத்தரவு பிறப்பித்தால், அந்த அனுமதியின் பேரில் தானே இதை நேரடியாக நிரூபித்து காட்டுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்