சுவிஸ் வங்கிகளில் குவிந்திருக்கும் இந்தியர்களின் பணம் எவ்வளவு? வெளியானது தகவல்

Report Print Arbin Arbin in இந்தியா

சுவிட்சர்லாந்து வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் பணம் ரூ.6,757 கோடி என அந்த நாட்டு மத்திய வங்கி தகவல் வெளியிட்டு உள்ளது.

சுவிட்சர்லாந்து வங்கிகளில் ஏராளமான வெளிநாட்டினர் தங்கள் பணத்தை சேமித்து வருகின்றனர். சேமிப்பாளர்களின் பெயர் விவரங்களை வெளியிடாமல் பாதுகாத்து வரும் இந்த வங்கிகளில் ஏராளமான இந்தியர்களும் கோடிக்கணக்கான பணத்தை சேமித்து வருகின்றனர்.

வெளிநாட்டினர் தங்கள் நாட்டு வங்கிகளில் சேமித்து வரும் பணம் குறித்த விவரங்களை சுவிட்சர்லாந்து மத்திய வங்கி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

அந்தவகையில் கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்து வங்கிகளில் இருந்த வெளிநாட்டினரின் மொத்த தொகை குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டது.

அதன்படி கடந்த 2018-ம் ஆண்டில் அந்த நாட்டு வங்கிகளில் இருந்த இந்தியர்களின் மொத்த சேமிப்பு தொகையின் மதிப்பு 955 மில்லியன் சுவிஸ் பிராங் ஆகும். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.6,757 கோடி.

மட்டுமின்றி முந்தைய ஆண்டைவிட 6 சதவீதம் குறைந்து உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது கடந்த 1995-ம் ஆண்டுக்குப்பின் 2-வது மிகப்பெரிய சரிவு எனவும் தெரியவந்துள்ளது.

அதேநேரம் இந்தியர்கள் அல்லது வெளிநாடு வாழ் இந்தியர்கள், வெளிநாட்டு நிறுவனங்களின் பெயரில் சேமிக்கும் பணம் இதில் அடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்