குழந்தைகளிடம் அத்துமீறுபவர்கள் மனநோயாளிகள்.. தூக்கு தண்டனை அளித்தாலும் பயனில்லை! கமல்ஹாசன்

Report Print Kabilan in இந்தியா

சிறு குழந்தைகளிடம் அத்துமீறி நடந்துகொள்பவர்கள் மனநோயாளிகள் என்றும், அவர்களுக்கு தூக்கு தண்டனை அளித்தாலும் பயனில்லை என்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. வீடியோ Conferencing மூலமாக கிராம மக்களுடன் கமல்ஹாசன் உரையாடினார்.

அப்போது அவர், ‘சிறு குழந்தைகளிடம் அத்துமீறி நடந்துகொள்பவர்கள் மனநோயாளிகள், அவர்களுக்கு தூக்கு தண்டனை அளித்தாலும் பயனில்லை. 10 ஆயிரம் கோடி செலவு செய்து கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை விட, மழை நீரை சேகரிப்பது சிறந்தது.

முறையாக மழை நீரைச் சேமித்து வைத்திருந்தால் மக்கள் தண்ணீருக்காக வீதியில் இறங்கி வர தேவையில்லை. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் எதிர்க்கும்.

இதுபோன்ற மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு வீதியில் இறங்கி போராட எனக்கு பயமில்லை. அவ்வாறு பயம் இருந்தால் பிரதமரையும், முதல்வரையும் நான் விமர்சிக்க மாட்டேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்