ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த இளம்பெண்.. மூன்று இளைஞர்களால் அவருக்கு நேர்ந்த கதி

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் இளம்பெண்ணும், குத்துச்சண்டை வீராங்கனையுமான சுமன் குமாரியை தாக்கி மோசமாக நடந்து கொண்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீராங்கனை சுமன் குமாரி. இவர், சமீபத்தில் தைவானில் நடந்த குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றவர்.

கொல்கத்தாவில் வசித்து வரும் இவர் கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டில் இருந்து ஸ்கூட்டியில் அலுவலகத்துக்கு கிளம்பினார்.

அப்போது இவரது வண்டியின் அருகே வந்த இளைஞர் ஒருவர், கடுமையாகத் திட்டிவிட்டு அருகில் நின்ற பேருந்தில் ஏறிவிட்டார்.

அதிர்ச்சி அடைந்த சுமன் குமாரி, பேருந்தை பின் தொடர்ந்து சென்றார். அடுத்த நிறுத்தத்தில் நின்றபோது, அந்த இளைஞரிடம் ஏன் திட்டினாய் என்று கேட்டார். பேருந்தில் இருந்து இறங்கிய அந்த வாலிபர், சுமன் குமாரியின் கழுத்தைப் பிடித்து ஆபாசமாகப் பேசியுள்ளார்.

அருகில் இருந்த பொலிசாரை உதவிக்கு வருமாறு அழைத்தும் அவர் வரவில்லை

இதையடுத்து தனது பேஸ்புக்கில் இது தொடர்பில் விரிவாக எழுதிய சுமன் குமாரி பின்னர் பொலிசில் புகார் செய்தார்.

இதையடுத்து நடவடிக்கையில் இறங்கிய பொலிசார் ராகுல் சர்மா, ஷேக் பெரோஷ், வாசிம் கான் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக சுமன் குமாரி கூறுகையில், பெண்கள் தற்காப்பை கற்றுக்கொள்ள வேண்டும். அதனால் தான் என்னை நான் தற்காத்துக் கொள்ள முடிந்தது என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்