எழுவர் விடுதலை விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

Report Print Fathima Fathima in இந்தியா

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேர் விடுதலை குறித்து ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை முன் கூட்டியே விடுதலை செய்யும் வகையில் தமிழக அரசு சட்டப்பேரவையில் 2014ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.

இந்நிலையில், தங்களை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் 2012-ல் தொடர்ந்த வழக்கு இன்று (திங்கள்கிழமை) நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான வழக்குகள் ஜூலை 30-ம் திகதி பட்டியல் இடப்பட்டுள்ளதால் இந்த வழக்கையும் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கும்படி தமிழக அரசு சார்பில் கேட்டுகொள்ளப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கில் அரசு முடிவெடுத்த பின்பு ஏன் தாமதம்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு தரப்பில், ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதால் வழக்கு 30ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...