மனைவியும் அந்த 3 பேரும் தான் காரணம்! வீடியோ பதிவுசெய்துவிட்டு தற்கொலை செய்த கணவன்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் மனைவி வேறு நபருடன் சென்றதால் மனமுடைந்த கணவன் வீடியோ ஒன்றை வெளியிட்ட பின்னர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரை சேர்ந்தவர் கந்தராஜூ. இவர் மனைவி பாக்யா. தம்பதிக்கு ஒரு மகன் உள்ளான்.

இந்நிலையில் பாக்யாவுக்கு செல்போன் மூலம் குமார் என்பவர் நட்பான நிலையில் பின்னர் அது கூடாநட்பாக மாறியது.

இது குறித்து அறிந்த கந்தராஜூ இருவரையும் கண்டித்தார். ஆனால் இதை கேட்காத பாக்யா அவருடன் ஓட்டம் பிடித்தார்.

இந்நிலையில் பாக்யாவின் பெற்றோரும் குமாருக்கு ஆதரவாக இருந்ததை கந்தராஜூ அறிந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தனது இறப்புக்கு மனைவி பாக்யா, மாமனார், மாமியார் உட்பட நால்வர் காரணம் என கூறி வீடியோ ஒன்றை பதிவு செய்தார்.

பின்னர் தனது நிலத்துக்கு சென்ற கந்தராஜூ அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து கந்தராஜூவின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவர் பெற்றோர் பொலிஸ்சில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்