தூக்கத்தில் இருந்த மனைவி மக்களை கழுத்தறுத்து கொன்ற கணவன்... பின்னர் செய்த அதிர்ச்சி செயல்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் அரியானா மாநிலத்தில் தூக்கத்தில் இருந்த மனைவி மற்றும் மகளை கழுத்தறுத்து கொன்ற கணவன், பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ரசாயன தொழிற்சாலை ஒன்றில் மூத்த பணியாளராக செயல்பட்டுவரும் 55 வயதான பிரகாஷ் சிங் என்பவரே குடும்பத்தை கொலை செய்த பின்னர் தற்கொலை செய்துகொண்டவர்.

சனிக்கிழமையே இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மனைவியும் 22 வயதான மகளும் 13 வயது மகனும் தூக்கத்தில் இருந்த வேளையிலேயே பிரகாஷ் மூவரையும் கழுத்தறுத்து கொலை செய்துள்ளார்.

பின்னர் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

திங்களன்று காலையிலும் வீட்டிலுள்ள எவரையும் வெளியே காணவில்லை என்பதால் சந்தேகமடைந்த அண்டை வீட்டார் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த நிலையிலேயே சடலங்களை கண்டுள்ளனர்.

முனைவர் பட்டம் பெற்ற பிரகாஷ் உத்தரபிரதேச மாநிலத்தின் வாரணாசி பகுதியை சேர்ந்தவராவார். பணி நிமித்தம் கடந்த 8 ஆண்டுகளாக குர்கான் பகுதியில் குடியிருந்து வருகிறார்.

பிரகாஷின் அறையில் இருந்து கடிதம் ஒன்றும் சிக்கியுள்ளது. அதில், குடும்ப விவகாரங்களை தன்னால் திறம்பட முன்னெடுக்க முடியவில்லை என்பதாலையே இந்த தற்கொலை முடிவை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

நிபுணர்கள் குழு அந்த கடிதத்தின் உண்மைத் தன்மை குறித்து ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சடலங்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...