கோவில் திருவிழாவிற்கு வந்த என்னை 5 பேர்... திருநங்கை வாழ்க்கையில் நடந்த சோகம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை ஒருவர், தன்னுடைய ஆரம்ப காலத்தில் அனுபவித்த கஷ்டங்களைப் பற்றி கூறியுள்ளார்.

முன்பெல்லாம் திருநங்கை என்றால் ஒரு மாதிரி பலரும் பார்ப்பர், ஆனால் இப்போது அது காலப்போக்கில் மாறி வருகிறது. அவர்களும் தங்களுக்கென்று ஒரு வேலை, படிப்பில் சாதனை என பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர்.

இந்நிலையில் 55 வயதை தாண்டிய திருநங்கை பாரதி கண்ணம்மா சமூக செயற்பாட்டாளரான இவர் தன்னுடைய ஆரம்பகாலத்தில் திருநங்கையாக இருந்த போது சந்தித்த துயரங்களை பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அதில், என்னுடைய சொந்த ஊர் மதுரை. உண்மையான பெயர் அழகுராஜ். வீட்டிற்கு நான் ஒரே பையன் என்பதால் அவ்வளவு செல்லம், ஆனால் நான் பள்ளியில் படிக்கும் போது எனக்குள்ள உடல்ரீதியா மாற்றும் தெரிந்தது.

அப்போது மற்றவர்கள் மற்றும் உறவினர்கள் பெற்றோரிடம் நீங்கள் ஏதோ பாவம் செய்ததன் காரணமாகவே உங்கள் பையன் இப்படி பெண் போன்று நடந்து கொள்கிறான் என்று கூறினார்.

அப்போது என்னை பள்ளியில் பலரும் கிண்டல் செய்தார்கள், என் உடம்பில் என்ன நடக்குது என்றே தெரியாமல் தினந்தோறும் அழுது கொண்டிருந்தேன்,

பள்ளி முடித்துவிட்டு காலேஜுக்குப் போகும்போது நான் முழு பெண்ணாக உணர்ந்தேன். அப்போது என் அம்மா நான் உயிரோடு இருக்கும் வரை மும்பை சென்று அறுவை சிகிச்சை செய்துவிடாதே என்று கெஞ்சினார்.

இதனால் ஆண் உடை உடுத்திக் கொண்டு கல்லூரிக்கு சென்றேன், அங்கு ஆண்களோட பாலியல் சீண்டல் அதிகமானது.

அதுமட்டுமல்ல ஊரையும், என்னையும் ஏமாற்றி வாழ்வது பிடிக்காததால், கடந்த 2004-ல் அம்மா இறந்ததும் முழு பெண்ணாக மாறினேன்.

அதுக்குப் பிறகுதான் தோளைத்தட்டுறது, இடுப்பைக் கிள்ளுறதுன்னு பாலியல் தொல்லைகள் அதிகமானது.

போன் வந்தா நான், ஹலோ' சொன்னதுமே தப்பாத்தான் பேசுவாங்க. ஒருமுறை மதுரை ரிசர்வ்லைன் பகுதியில உள்ள கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவில் முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சியில நான் கலந்துக்கிட்டேன்.

அப்போ அங்கிருந்த ஐந்து பேர் என்னோட வாயப் பொத்தி தூக்கிட்டுப் போனாங்க; கத்தியைக் காட்டி மிரட்டி ரொம்ப தொந்தரவு பண்ணுனாங்க. என்னோட வாழ்க்கையில மறக்கமுடியாத சம்பவம் அது தான்.

அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக திருநங்கைகளின் வாழ்க்கை மாற ஆரம்பித்தது. தொடர்ந்து சமூகப் பணிகளில் ஆர்வம் காட்டினேன். என்னைப்போல உள்ள திருநங்கைகளை அரவணைச்சு அவங்களுக்கு சுயமா தொழில் நடத்த வழிகாட்டத் தொடங்கினேன். திருநங்கைகள் பாதுகாப்பு, எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து தொடர்ந்து பல கருத்தரங்குகளில் பேசிக் கொண்டு வருகிறேன்.

அதன் பின் தேர்தல்களில் போட்டியிட்டேன், அதில், . 2014-ஆம் வருடம் சட்டமன்றத் தேர்தல்ல மதுரை மத்திய தொகுதி வேட்பாளரா போட்டியிட்ட 31 பேரில் மக்கள் ஆதரவோட 15-வது இடம் பிடித்தேன்.

இந்தியாவில் மக்கள் நீதிமன்றத்தில் முதல் திருநங்கை நீதிபதியாக இருக்கேன் என்று கூறி முடித்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...