புதைகுழிக்குள் அடக்கம் செய்யும் நேரத்தில் திடீரென உயிர்பெற்று எழுந்த இளைஞர்

Report Print Vijay Amburore in இந்தியா

இந்தியாவின் லக்னோ நகரத்தில் தனியார் மருத்துவமனையில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட இளைஞர் அடக்கம் செய்யப்படுவதற்கு சில வினாடிகளுக்கு முன் உயிர் பெற்று எழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச தலைநகர் லக்னோவை சேர்ந்த முகமது பர்ஹான் (20) என்கிற இளைஞர் கடந்த வெள்ளிக்கிழமை தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து சிக்கியுள்ளார்.

அங்கிருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சைக்காக மட்டும் மருத்துவர்கள் ரூ.7 லட்சம் வரை பெற்றுள்ளனர்.

அதற்கு மேலாகவும் மருத்துவமனை நிர்வாகம் பணம் கேட்டபொழுது, தங்களிடம் இதற்கு மேல் இல்லை என இளைஞரின் உறவினர்கள் கூறியதாக தெரிகிறது.

இதனையடுத்து அந்த மருத்துவமனை நிர்வாகம் இளைஞர் இறந்துவிட்டதாக உறவினர்களிடம் கூறியது. அதனை உண்மை என நம்பிய உறவினர்கள் இறுதி சடங்கிற்கான வேலைகளை பார்க்க ஆரம்பித்தனர்.

அவருக்கான குழி தோண்டப்பட்டு, அதில் புதைக்க முயன்றுள்ளனர். அப்போது அவர் திடீரென உயிருடன் இருப்பதை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உடனே அவர் அங்கிருந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் சம்மந்தப்பட்ட தனியார் மருத்துவமனையின் மீது பொலிஸில் புகார் கொடுத்திருப்பதாக முகமதுவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்