சென்னையில் 70 வயது கோடீஸ்வரர் வீட்டில் 27 வயது இளம்பெண் செய்த மோசமான செயல்

Report Print Raju Raju in இந்தியா

சென்னையில் பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதாக தொழிலதிபர் மனைவியின் கவனத்தை திசை திருப்பி ரூ.7 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைர நகைகளை கொள்ளையடித்து சென்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியை சேர்ந்தவர் ராதா (65), கோடீஸ்வர தொழிலதிபர் தினேஷ் டால்மியா (70)வின் மனைவியான இவர், கடுமையான மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார். இவருக்கு மருத்துவர் 10 நாட்களுக்கு பிசியோதெரபி பயிற்சி அளிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தார்.

இதனால் ஏஜென்சி மூலம் 10 நாட்களுக்கு பிசியோதெரபி அளிக்க சவுமியா (27) என்ற செவிலியர் நியமிக்கப்பட்டார்.

அதன்படி ராதாவுக்கு சவுமியா கடந்த ஒரு வாரமாக வீட்டிற்கு வந்து சிகிச்சை அளித்தார்.

கடந்த 19ம் திகதி சவுமியா வந்து ராதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளித்தார். அப்போது ராதா அணிந்து இருந்த ரூ.7 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை கழற்றி பீரோவில் வைத்துள்ளார்.

பின்னர் உடல் முழுவதும் எண்ணெய் தடவி கை கால்களை மசாஜ் செய்துள்ளார். பிறகு ராதா குளிக்க சென்ற போது வைர நகைகளை திருடிக் கொண்டு சவுமியா மாயமாகிவிட்டார்.

இதுகுறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் பொலிசார் தலைமறைவாக இருந்த சவுமியாவை நேற்றிரவு கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 15 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

குடும்ப வறுமை காரணமாக பணம் தேவைப்பட்டதால் நகைகளை திருடியதாக சவுமியா பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...