சிறையில் இருந்து கொண்டே சசிகலா செய்த அதிரடி செயல்!

Report Print Raju Raju in இந்தியா

அமமுகவில் இருந்து நிர்வாகிகள் பலர் தொடர்ந்து வெளியேறும் நிலையில் சிறையில் இருந்தபடியே கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை தேர்வு செய்துள்ளார் சசிகலா.

ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்த சூழலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலர் விலகி வேறு கட்சியில் சேர்ந்து வருகின்றனர்.

இது கட்சியின் பொதுச்செயலர் டிடிவி தினகரனை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் 15 நாட்களுக்கு ஒருமுறை சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்கும் டிடிவி தினகரன் இன்றும் அவரை சந்தித்துள்ளார்.

அப்போது கையில் முக்கியமான ஃபைல் ஒன்றையும் எடுத்துச் சென்றிருக்கிறார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சிக்கான மாநில, மாவட்ட அளவிலான அனைத்துப் பொறுப்புகளுக்கும் புதிய நிர்வாகிகள் பட்டியல் இதுவரை அறிவிக்கப்படாமல் இருக்கிறது.

மத்தியத் தேர்தல் கமிஷனுக்கும் முறைப்படி இந்த விவரத்தைத் தெரியப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நிர்வாகிகள் பட்டியலை சசிகலா தேர்வு செய்து தினகரனிடம் கொடுக்கிறார்.

அதை தொடர்ந்து நிர்வாகிகள் பட்டியலை தினகரன் ஊடகங்களிடம் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்