ஆசையாக ஊருக்கு வந்த காதல் ஜோடிக்கு நேர்ந்த பயங்கரம்... இளம் பெண்ணை அடித்து தூக்கி சென்ற வீடியோ

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் காதல் திருமணம் செய்து ஊருக்கு திரும்பிய ஜோடியை மர்மநபர்கள் சிலர் கட்டையைக் கொண்டு கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் பிரெய்லியில் கிராமத்தைச் சேர்ந்த காதல் ஜோடி திருமணம் முடித்து சொந்த ஊருக்கும் திரும்பிய போது, அங்கு அவர்களை சூழ்ந்து கொண்ட கும்பல் ஒன்று அந்த பெண் மற்றும் கணவனையும் கட்டையால் தாக்கியுள்ளனர்.

இதில் கணவன் அந்த இடத்திலே மயங்கி விழ, உடனே அவர்கள் தாக்கப்பட்ட பெண்ணை, தங்களது இருசக்கர வாகனத்தில் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர்.

இது தொடர்பான வீடியோ காட்சியை அங்கிருந்த நபர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட வைரலானதால், பொலிசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது, சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தம்பதியரை தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சம்பவம் நடந்த அன்றே அந்த பெண்ணின் உறவினர்களிடம் இருந்து அவர் மீட்கப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...