120 அடி உயரே அழுகிய நிலையில் இளம்பெண்ணின் சடலம்!

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் இரண்டு அடுக்குமாடி கட்டிடத்தின் இடையே சிக்கிய நிலையில் இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தின் நொய்டாவில் செக்டர் 76 இல் அமைந்துள்ள அம்ரபாலி சிலிக்கான் குடியிருப்பில் இருந்து பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், தரையில் இருந்து 120 அடி உயரத்தில் இரண்டு குடியிருப்பு கட்டிடங்களுக்கு இடையே சிக்குண்ட நிலையில் பெண்ணின் சடலம் இருந்துள்ளது.

தொடர்ந்து தேசிய பேரிடர் படையை சேர்ந்த 35 பேர் கொண்ட குழுவினர் மீட்பு நடவடிக்கையில் களமிறங்கினர்.

சுமார் 3 மணி நேரம் போராடிய அந்த குழுவினர், இரண்டு கட்டிடங்களுக்கு இடையே சுமார் ஒன்றரை அடி இடைவெளியில் சிக்கியிருந்த அந்த சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட அந்த இளம்பெண் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் எனவும், ,அந்த குடியிருப்பில் தங்கியுள்ள திருமணமான தம்பதிக்கு சமையல் உதவி செய்து வந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அந்த தம்பதிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். இதனிடையே ஜூன் 28 முதல் குறித்த இளம்பெண் மாயமானதாகவும், பொலிசாரிடம் இந்த விவகாரம் தொடர்பில் புகார் அளித்துள்ளதாகவும் அந்த தம்பதிகள் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும், உடற்கூறு ஆய்வுக்கு பின்னரே, அவர் எவ்வாறு இறந்தார் என்பது தொடர்பில் தெரியவரும் எனவும், அதன் பின்னரே உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...