ஆசையாக மனைவி, குழந்தையை பார்க்க வந்த கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Vijay Amburore in இந்தியா

வேலூர் மாவட்டத்தில் 7 மாத குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பவித்ரா (21) என்பவர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக, மத்திய பாதுகாப்பு படையில் பணிபுரியும் சுரேஷ் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

கடந்த 8 மாதங்களுக்கு முன் பவித்ரா பிரசவத்திற்காக தன்னுடைய தாய் வீட்டிற்கு வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. விஷ்வா என பெயரிட்டு இருவரும் பாசமாக வளர்த்து வந்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன் ஏற்பட்டு கருத்து வேறுபாடு காரணமாக பவித்ரா தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த 30ம் திகதியன்று பவித்ராவின் பெற்றோர் வெளியில் சென்றுள்ளனர். அதேசமயம் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையை பார்ப்பதற்காக சுரேஷ் ரயிலில் ஊருக்கு வந்துகொண்டிருந்துள்ளார்.

இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த பவித்ரா மகனை தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து கொன்றுவிட்டு, தானும் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மறுநாள் காலையில் வீட்டிற்கு வந்த அவருடைய பெற்றோர் மகள் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் ஆசையாக ஊருக்கு வந்த சுரேஷ் தன்னுடைய மனைவி மற்றும் மகள் பிணமாக கிடப்பதை பார்த்து கதறி அழுதிருக்கிறார்.

திருமணம் முடிந்து ஒன்றரை வருடங்கள் மட்டுமே ஆகியிருந்த நிலையில் பவித்ரா குழந்தையை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...