ஆசை வார்த்தை காட்டி அத்துமீறிய காதலன்: இளம்பெண் செய்த காரியம்

Report Print Vijay Amburore in இந்தியா

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை காட்டி உல்லாசமாக இருந்துவிட்டு தற்போது திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலன் வீட்டின் முன் இளம்பெண் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஹரிகரன் (வயது 22) என்கிற இளைஞருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த ரமணி (19) என்கிற இளம்பெண்ணுக்கும் சேலத்தில் உள்ள ஒரு ஐ.டி.ஐ.யில் படித்த போது காதல் மலர்ந்துள்ளது.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர்.

6 மாதத்திற்கு முன்பு 2 பேரும் திருப்பூருக்கு சென்று அங்கு ஒரே இடத்தில் தங்கி பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்திருக்கின்றனர். அந்த சமயம் ஹரிகரன், ரமணியிடம் திருமண ஆசைக்காட்டி உல்லாசமாக இருந்து வந்தார்.

ஹரிகரனிடம் ரமணி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்தார். இதற்கு சம்மதம் தெரிவித்த ஹரிகரன் திருமணத்திற்காக ஆதார்கார்டை எடுத்து வருகிறேன் என கூறிக்கொண்டு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.

அதன் பிறகு மீண்டும் அவர் திருப்பூருக்கு வராததால், ஏமாற்றம் அடைந்த ரமணி ஹரிகரனை தொடர்பு கொண்டு திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால் அதற்கு ஹரிகரன் மறுத்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ரமணி நேற்றிரவு காதலன் ஹரிகரன் வீட்டு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் ஹரிகரன் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டனர்.

பூட்டிய வீட்டின் முன்பு அமர்ந்து ரமணி தர்ணாவை தொடர்ந்துள்ளார். அங்கு வந்த பொலிஸார் ரமணியிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஹரிகரன் தன்னை திருமணம் செய்யும் வரை இங்கிருந்து செல்லமாட்டேன் என கூறி ரமணி அடம் பிடித்திருக்கிறார்.

ஒருவழியாக பொலிஸார் அவரை சமாதானம் செய்து இரவு 10 மணிக்கு அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இன்று காலை ரமணி மீண்டும் காதலன் வீட்டு முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அவர் மண்ணெண்ணெய் கேனும் எடுத்து வந்திருந்தார்.

ஹரிகரன் தன்னை திருமணம் செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டேன் என்றும் அவர் மறுத்தால் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்வேன் என்றும் கூறி வருகிறார்.

பொலிஸார் ரமணியிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers